திருப்பூர் தெற்கு: திருப்பூர் சின்னக்காட்டூர்: சுடுகாட்டு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த நபர் - மக்கள் தவிப்பு
திருப்பூர் பொங்கலூர் ஒன்றியம் சின்னக்காட்டூரில், பொது இடுகாடாகப் பயன்படுத்தப்பட்ட நீரோடைப் பகுதியை பட்டா நில உரிமையாளர் ஆக்கிரமித்து கம்பி வேலி அமைத்துள்ளார். இதனால் இறந்தவர்களை அடக்கம் செய்ய வழியின்றி பொதுமக்கள் அவதிப்படுவதால், ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.