தூத்துக்குடி: புதுக்கோட்டை சிறுபாடு ஜனனி நகர் பகுதியில் வீடுகளை குளத்தில் இருந்து வெளியேறும் வெள்ள நீர் சூழ்ந்து பாதிப்பு கருப்புக்கொடி ஏற்றி மக்கள் ஆர்ப்பாட்டம்
வங்கக் கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் தற்போது வரை பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே உள்ள காளிமுத்து நகர் மற்றும் ஜனனி நகர் பகுதியில் குடியிருப்புகளை அந்த பகுதி அருகே உள்ள பெரியபுபிராட்டி குளத்தில் இருந்து குளம் நிரம்பி நீர் மாறுகால் பாய்வதால் குளத்தில் இருந்து வெளியேறும் நீர் சூழ்ரந்து பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.