போச்சம்பள்ளி: மத்தூர் அரசு மகளிர் பள்ளியில் இலவச மருத்துவ முகாம் மற்றும் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இலவச மருத்துவ முகாம் மற்றும் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அரிமா சங்கம் மற்றும் விஜய் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இணைந்து நடத்திய இந்த முகாமில் மாணவிகள் மற்றும் பொதுமக்கள் திரளாகப் பங்கேற்று பயனடைந்தனர்.