பெரம்பலூர்: பாலக்கரை பகுதியில் உலக போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் துவக்கி வைத்தார்
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை (ம) வருவாய் துறை இணைந்து, உலக போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது, பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் இருந்து, பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கற்பகம் கொடியசைத்து துவக்கி வைத்தார், பேரணிக்கு முன்பாக போதைப் பொருள் ஒழிப்பு குறித்த உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது