பண்ருட்டி: கோபாலபுரம் மணிமுத்தாற்றில் மணல் கடத்தலை தடுக்க வந்த கிராம நிர்வாக அலுவலரை கத்தியை காட்டி மிரட்டியவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கோபாலபுரம் மணிமுத்தாற்றில் அகோத்தமன் அன்பழகன் உள்ளிட்ட 4 பேர் மாட்டு வண்டியில் மணல் கடத்தி வருவதாக தடுக்க அங்கு சென்ற கிராம நிர்வாக அலுவலர் அசோக் ராஜாவை கத்தியை காட்டி மிரட்டி அங்கிருந்து தப்பிச்சென்ற அகோத்தமன் மற்றும் அன்பழகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.இதில் அகோத்தமன் என்பவர் மீது மணல் கடத்தல் வழக்கு நிலுவையில் உள்ளது தொடர்ந்து காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவு