பெரம்பலூர்: ஆலம்பாடி ஏரியில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி தொடக்கம்!
பெரம்பலூர் மாவட்டம் ஆலம்பாடி ஏரியில் சமூக பொறுப்புணர்வு நிதியின் கீழ் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிகளை மாவட்ட ஆட்சியர் அப்துல் ராசிக் தொடங்கி வைத்தார். மக்களின் கோரிக்கையை ஏற்று வீரம்மாள்குளம் மற்றும் பெரிய ஏரிகளில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.