கிருஷ்ணகிரி: முகநூல் கார் விளம்பரம்: விவசாயியிடம் 1.23 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்களுக்கு வலை
கிருஷ்ணகிரியில் முகநூல் விளம்பரத்தை நம்பி கார் முன்பதிவு செய்த விவசாயிடம் 1.23 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. ராணுவ அதிகாரி எனக்கூறி நூதன முறையில் மோசடி செய்த மர்ம நபர்களை இணையதள குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.