சாத்தான்குளம்: காமராஜர் சிலை அருகே பிஜேபி சார்பில் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் உள்ள காமராஜர் சிலை அருகே பாஜக சார்பில் பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடாததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் சித்ராந்தகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து உடனடியாக பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.