சாத்தான்குளம்: குடும்பத் தகராறில் மச்சானை வெட்டி படுகொலை செய்த மாமாவை கைது செய்த போலீஸ் - தட்டார்மடத்தில் பரபரப்பு
சாத்தான்குளம் அருகே உள்ள தட்டார்மடம் மேல நடுவகுறிச்சி சேர்ந்தவர் சண்முகசுந்தரம் என்பவரின் மகன் கந்தையா, இவர் தட்டார்மடம் அருகில் உள்ள தாமரை மொழியைச் சேர்ந்த அரசப்பதேவர் மகன் சூரிய நாராயணன் என்பவரின் சகோதரியை இரண்டாவது திருமணம் செய்து வாழ்ந்துள்ளார். சில வருடங்களுக்கு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். கந்தையா தினமும் இரவு நேரத்தில் தட்டார்மடம் வருதை வழக்கமாக கொண்டுள்ளார்.