காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்ததாக மானாமதுரை இளைஞர் மரணத்திற்கு நீதி கேட்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்பே கீழே விழுந்து போராட்டத்தில் ஈடுபட்ட அவரது குடும்பத்தினர் - இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பார்வையாளர்கள் போல் நின்றிருந்து தங்களின் கோரிக்கையை முதலமைச்சரிடம் கூற வேண்டும் என்று திடீரென முதலமைச்சரின் பாதுகாப்பு கான்வாய் வாகனங்களை முற்றுகையிட்டதால் மெரினா கடற்கரை சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.
மானாமதுரையைச் சேர்ந்தவர் ஆகாஷ். கடந்த மார்ச் மாதம் 6-ம் தேதி கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் காவலர்கள் தாக்கியதால் மார்ச் 8-ம் தேதி அன்று அவர் உயிரிழந்ததாக அவரது பெற்றோர்கள் குற்றம் சாட்டினர். அதன் பிறகு காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர். அவரது உடலை வாங்க மறுத்து நீண்ட நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டபோது உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு காவலர்கள் அவரது உடலை அடக்கம் செய்ய எடுத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தாக்கி ஆகாஷ் உயிரிழப்புக்கு காரணமான காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்ற வேண்டும் என்றும் இறந்துபோன ஆகாஷின் பெற்றோர்களான ராஜேஷ், கண்ணப்பன், அவரது மனைவி மற்றும் சகோதரர்கள், உறவினர்கள் ஆகியோர் இன்று காலை தமிழ்நாடு முதலமைச்சர் மெரினா கடற்கரை சாலையில் அவரது கான்வாய் பாதுகாப்பு வாகனத்தில் வரும்பொழுது பார்வையாளர்கள் போல் நின்றிருந்து, திடீரென கான்வாய் வாகனம் முன்பு ஓடிச்சென்று வாகனத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சுமார் 2 நிமிடம் முதலமைச்சரின் பாதுகாப்பு கான்வாய் வாகனம் மெரினா கடற்கரையில் நின்றது. அதன் பிறகு உடனடியாக காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அப்போது காவலர்களுக்கும் அவர்களுக்குமான தள்ளுமுள்ளில் காவலர்கள் சிலர் காயமடைந்திருப்பதாக கூறப்படும் நிலையில், எதனால் முதலமைச்சரின் கான்வாய் வாகனத்தை முற்றுகையிட்டனர் என்று விசாரணை காவல்துறையால் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. #tamilnadu #cmvijay #securty
Sadar, Lucknow | Sep 9, 2026