விருத்தாசலம்: மும்முடிசோழகன் கிராமத்தில் வீட்டில் கருப்பு கொடி கட்டி தேர்தலை புறக்கணிக்கப்போவதாக வைத்துள்ள பேனரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அடுத்த மும்முடி சோழகன் கிராமத்தில் 2000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் நிலையில் கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களை என்எல்சி நிர்வாகம் கையகப்படுத்தி உள்ளது.ஒரே பகுதியில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு பாகுபாடு இன்றி இழுப்பீடு வழங்க வேண்டும் ,வீட்டிற்கு ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெறும் நிலையில்,இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் வீட்டில் கருப்பு கொடி கட்டி தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளனர்.