பழனி: அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் வீடற்ற மக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோருடன் மாவட்ட ஆட்சியர் சாமி தரிசனம்
பழனி முருகன் கோயில் மற்றும் ஹெல்பிங் ஹார்ட்ஸ் குழு ஆகியவை இணைந்து கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீடற்ற மக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் பல்வேறு தங்குமிடங்களில் உள்ள 100 நபர்களை அழைத்து வந்து சிறப்பு சுவாமி தரிசனம் ,மாவட்ட ஆட்சியர் சரவணன், கோவில் அதிகாரிகளுடன் மதிய உணவு அருந்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.