குடியாத்தம்: வேலூர்: புரட்டாசி 3-வது சனிக்கிழமை - மீனூர் மலை பெருமாள் கோயிலில் குவிந்த பக்தர்கள்!
புரட்டாசி 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு வேலூர் மாவட்டம் குடியாத்தம் மீனூர் மலை சுயம்பு வெங்கடேச பெருமாள் கோயிலில் சிறப்பு அலங்காரம் மற்றும் கருட வாகனத்தில் பெருமாள் தரிசனம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.