அரியலூர்: அரியலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் ₹35,500 லஞ்சம் பறிமுதல்
அரியலூர் விக்கிரமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை நடத்தி கணக்கில் வராத ₹35,500 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சார்பதிவாளர் தேவகியும் பணியாளர்களும் தீவிர விசாரணைக்கு உள்ளாகியுள்ளனர்.