கோவில்பட்டி அருகே உள்ள இனாம் மணியாச்சி இந்திரா காலனி பகுதியில் 250க்கும் மேற்பட்ட பட்டியல் இன மக்கள் வசித்து வருகின்றனர் இந்நிலையில் 50 ஆண்டுகளாக சுடுகாட்டிற்கு கொட்டகை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில் தற்போது வரை கொட்டகை அமைக்கப்படவில்லை என கூறப்படுகிறது இந்நிலையில் அப்பகுதியில் இறந்த ஒருவரின் உடலை தற்காலிக கொட்டகை அமைத்து எரியோட்டினர் தொடர்ந்து விரைவில் அரசு கொட்டகை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்