விருத்தாசலம்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி விருதாச்சலத்தில் திமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்
தமிழக முதலமைச்சரும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, விருத்தாச்சலம் பாலக்கரை கடைவீதியில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு, மாலை அணிவித்து, கட்சி கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்வில் திமுக நகர செயலாளர் தண்டபாணி, விருதாச்சலம் நகர்மன்ற தலைவர் டாக்டர்.சங்கவி முருகதாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.