திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல்: குடிநீரில் கழிவுநீர் கலப்பதாக பேகம்பூரில் பொதுமக்கள் சாலை மறியல்
திண்டுக்கல் பேகம்பூர் பூச்சிநாயக்கன்பட்டி பிரிவு பகுதியில் குடிநீர் கோரியும், கழிவுநீர் கலப்பதாக புகார் தெரிவித்தும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நகர் தெற்கு காவல் ஆய்வாளர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.