திண்டுக்கல் கிழக்கு: ரவுண்ட் ரோட்டில் மொகரம் திருநாளை ஒட்டி நடைபெற்ற மத நல்லிணக்க கந்தூரி விழா- 5000 மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கல்
இஸ்லாமியர்கள் முக்கிய தினமான இந்த மொகரம் பண்டிகையை திண்டுக்கல் ரவுண்ட் ரோடு பள்ளிவாசல் ஜமாத் சார்பாக இந்த மொகரம் திருநாளை மத நல்லிணக்க நாளாக நினைவுகூர்ந்து வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் 500 கிலோ அரிசி, 300 கிலோ கத்திரிக்காய், 100 கிலோ தக்காளி, 75 கிலோ இஞ்சி பூண்டு உள்ளிட்டவைகளைக் கொண்டு கந்தூரி எனப்படும் அன்னதானமானது தயாரிக்கப்பட்டது. சுமார் 5,000-க்கும் மேற்பட்டோர் ஜாதி மத பேதம் இன்றி அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.