கூடலூர்: கூடலூர் பஜாரில் காரை ஆக்ரோஷமாக தாக்கிய காட்டு யானையால் மக்கள் அச்சம்
நீலகிரி மாவட்டம் கூடலூர் பஜார் அருகே புஷ்பகிரி செல்லும் சாலையில் திடீரென வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை சாலையில் உலா வந்தது. தொடர்ந்து அவ்வழியாக வந்த காரை தாக்கி சேதப்படுத்தியது. இதனால் போக்குவரத்து பாதிக்கபட்டு இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது