வாணியம்பாடி: வாணியம்பாடி நகர்மன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் சரமாரி புகார்: கொசு மருந்து அடிக்காத அவலம்!
வாணியம்பாடி நகராட்சி சாதாரண கூட்டத்தில் குடிநீர், சுகாதாரம், பூங்கா பராமரிப்பு மற்றும் கொசு மருந்து அடிக்காதது குறித்து மன்ற உறுப்பினர்கள் கடும் புகார் தெரிவித்தனர். 56 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், வார்டு உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நகர்மன்றத் தலைவர் உறுதி அளித்தார்.