கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, புதன்கிழமை மதியம் சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வருகை புரிந்து, தரைவழி மார்க்கமாக கொடைக்கானலுக்கு சென்றார் 100-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், கொடைரோடு அருகே அம்மையநாயக்கனூர் பாதுகாப்பு பணியில் மது போதையில் தள்ளாடிய காவலரை மற்ற காவலர்கள் சாலை அருகில் இருந்த ஒரு வாகனத்தின் மறைவில் சேர் போட்டு அமர வைத்தனர்.