புதுக்கோட்டை: பாஜக நிர்வாகியிடம் ரூ. 2 கோடி கேட்டு மிரட்டல்: இந்து எழுச்சி பேரவை தலைவர் கைது!
தஞ்சாவூரில் பாஜக விவசாயப் பிரிவு மாவட்டத் தலைவர் தங்கவேலை மிரட்டி ரூ. 2 கோடி கேட்ட இந்து எழுச்சி பேரவை தலைவர் பழ. சந்தோஷ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். போலி ஆவணம் என மிரட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.