ஆம்பூர்: ரூ.200-க்கு முழு கோழி ஆஃபர்; குவிந்த மக்களால் கடும் போக்குவரத்து நெரிசல்
ஆம்பூரில் இன்ஸ்டாகிராமில் வெளியான ரூ.200-க்கு முழு கோழி சலுகை அறிவிப்பால், உணவகத்தின் முன்பு மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் ஆம்பூர் சந்தைப்பேட்டை பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து கூட்டத்தைக் கலைத்தனர்.