கோவை வடக்கு: கோவையில் உலக இதய தின விழிப்புணர்வு பேரணி: மாநகராட்சி ஆணையர் பங்கேற்பு
உலக இதய தினத்தை முன்னிட்டு, கோவை விஜிஎம் மருத்துவமனை சார்பில் பந்தய சாலையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்க, மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.