திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல் தோமையார்புரத்தில் மதுபானம் விற்றவர் கைது: 26 பாட்டில்கள் பறிமுதல்
திண்டுக்கல் தோமையார்புரம் பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற மாதவன் என்பவரை தாலுகா காவல் நிலைய காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து 26 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.