அரியலூர்: அரியலூரில் தலைமை தேர்தல் ஆணையர் உருவ பொம்மை எரிப்பு: காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்
வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் மற்றும் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகக் கோரி அரியலூரில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனுமதி மறுக்கப்பட்டதால், புறவழிச் சாலையில் உருவ பொம்மையை எரித்து எதிர்ப்பை தெரிவித்தனர்.