பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே வெளிநாடு வாலிபர் படுகொலை: கல்லை தூக்கி போட்டு கொடூரம்
பெரம்பலூர் அருகே வெளிநாடு சென்று வந்த வாலிபர் வெற்றிவேல் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டார். கிரகப்பிரவேசத்திற்காக ஊருக்கு வந்த 10 நாட்களில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.