முதுகுளத்தூர்: கிருஷ்ணாபுரம் வயல் காட்டில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்து தந்தை பலி, 15 வயது மகன் படுகாயம்
மேலத்தூவல் கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்த சித்திரைவேல் மற்றும் அவரது மகனான பதினோராம் வகுப்பு படிக்கும் 15 வயதான கிஷோர் குமார்  ஆகியோர் கிருஷ்ணாபுரம் வயல்காட்டில் உள்ள ஆட்டுக்கிடையில்  இருந்து ஆடுகளை மேய்ச்சலுக்கு வெளியே கொண்டு வந்த போது  நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக மின்கம்பம் சாய்ந்து அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் சித்திரை வேல்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.காயமடைந்த மகன் கிஷோர் குமார் இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்