நத்தம்: நத்தம் அருகே நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த 2 பேர் கைது
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சின்னையம்பட்டி காப்பு காடு பகுதியில் அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி மற்றும் இரும்பு கண்ணிகள் வைத்திருந்த மருதனாண்டி, சுப்பிரமணி ஆகிய இருவரை வனத்துறையினர் கைது செய்தனர். வனச்சரக அலுவலர் புவியரசன் தலைமையிலான குழுவினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.