உத்தமபாளையம்: சபரிமலை சீசன்: பக்தர்களுக்கான வசதிகள் குறித்து தேனி-இடுக்கி மாவட்ட அதிகாரிகள் ஆலோசனை
சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன் நெருங்குவதையொட்டி, பக்தர்களின் வசதிக்காக இரு மாநில எல்லையான குமுளி, கம்பம் மெட்டு பகுதிகளில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தேக்கடியில் நடைபெற்றது.