ஓசூர்: ஓசூரில் வள்ளலாரின் 203-வது அவதார திருநாள் விழா: சமூக சேவகர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வள்ளலாரின் 203-வது அவதார திருநாள் விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. விவேகம் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இந்த விழாவில், சிறந்த சமூக சேவகர்களுக்கு ஜீவகாருண்ய விருதுகள் வழங்கப்பட்டன. பல்வேறு ஆதீனங்கள் மற்றும் ஆன்மீகப் பெரியோர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.