நாங்குநேரி: நெல்லை: களக்காடு தலையணை, மலை நம்பி கோவிலுக்குச் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை
நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையினால், களக்காடு தலையணை மற்றும் திருக்குறுங்குடி மலை நம்பி கோவிலுக்குச் செல்ல இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.