தாராபுரம்: இடைத்தேர்தல் - காவல்துறையினருக்கான தபால் வாக்குப்பதிவு தொடக்கம்!
தாராபுரம் இடைத்தேர்தலை முன்னிட்டு, தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் காவல்துறையினருக்கான தபால் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 195 காவலர்களில், இதுவரை 50 பேர் வாக்களித்துள்ளனர். இன்று மாலை 5:30 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.