அரியலூர்: உயர்கல்வி வழிகாட்டி முகாமில் 65 மாணவர்கள் உடனடி சேர்க்கை
அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற 'உயர்வுக்கு படி' முகாமில், 12-ம் வகுப்பு முடித்த 65 மாணவர்கள் கலை, தொழில்நுட்பம் மற்றும் தொழிற்பயிற்சி படிப்புகளில் உடனடியாக சேர்ந்துள்ளனர். ஆட்சியர் மிருணாளினி அவர்கள் இந்த முகாமினை தொடங்கி வைத்தார்.