தூத்துக்குடி: தாராபுரம் வேட்பாளர் கார்த்திகா கைது: தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்
தாராபுரம் தேர்தல் வேட்பாளர் கார்த்திகா மற்றும் நிர்வாகிகளின் கைது நடவடிக்கையை கண்டித்து, தூத்துக்குடி விவிடி சிக்னலில் நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.