கோவை வடக்கு: குட்கா கடத்தலைத் தடுத்த காவலர் வேல்முருகனை நேரில் பாராட்டிய முதலமைச்சர்
கோவையில் குட்கா கடத்தல்காரர்களைத் தடுத்தபோது காரின் மேற்கூரையில் ஏறி 40 கி.மீ பயணம் செய்த தலைமைக் காவலர் வேல்முருகனின் துணிச்சலான செயலைப் பாராட்டி முதலமைச்சர் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். இந்தச் சம்பவத்தில் 233 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு, 3 பேர் கைது செய்யப்பட்டனர்.