போடிநாயக்கனூர்: தேனி அணைப்பிள்ளையார் நீர்வீழ்ச்சியில் வெள்ளம்: தடையை மீறிய சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றம்
தேனி மாவட்டம் அணைப்பிள்ளையார் நீர்வீழ்ச்சியில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்துள்ள நிலையில், தடையை மீறி குளித்த சுற்றுலாப் பயணிகளை காவல்துறையினர் வெளியேற்றினர். மாவட்ட ஆட்சியர் ஏற்கனவே தடை விதித்துள்ள நிலையில், பாதுகாப்பு கருதி அப்பகுதியில் காவல்துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.