போடிநாயக்கனூர்: போடிமெட்டு சாலையில் உலா வரும் காட்டு யானைகள்: வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை!
தேனி மாவட்டம் போடிமெட்டு அருகே தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. தலக்குளம் பகுதியில் யானைகள் கூட்டமாக சாலையை கடப்பதால், வாகன ஓட்டிகள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.