காளையார்கோவில்: காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகளிர் தின பேரணி மற்றும் பொதுக்கூட்டம்
சிவகங்கை மாவட்ட மக்களமைப்பு சார்பில் மகளிர் தின பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகளிர் தின பேரணியை காளையார்கோவில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அருள்ராஜ் தொடங்கிவைத்தார். காளீஸ்வரர் கோயில் முன்பு உள்ள மருது பாண்டியர்கள் கலையரங்கத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி ஸ்டெல்லா முத்துசாமி, ஊராட்சி மன்ற தலைவர் ஜோஸ்பின் மேரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த மகளிர் தின பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.