வேதாரண்யம்: சாலையில் கிடந்த மண்ணால் சறுக்கி விழுந்த பெண் பலி; டிராக்டர் சக்கரத்தில் சிக்கி விபரீதம்
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே சாலையில் கொட்டிக்கிடந்த வண்டல் மண்ணால் ஸ்கூட்டி சறுக்கி விழுந்த பெண், எதிரே வந்த டிராக்டர் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 100 நாள் வேலைக்குச் சென்ற மலர்கொடி என்ற பெண்ணுக்கு நேர்ந்த இந்த சோகம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.