திருநெல்வேலி: நெல்லை ரயில் நிலையத்தில் பயணிக்கு கத்திக்குத்து: 2 பேர் கைது
நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் சேலம் ரயிலுக்காக காத்திருந்த பயணியை கத்தியால் குத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். காயமடைந்த பயணி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.