பெரம்பலூர்: விவசாயிகள் ஊடுபயிராக பசுந்தீவனம் வளர்க்க விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தகவல்
பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகள் தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தென்னை மற்றும் பழத்தோட்டங்களில் ஊடுபயிராக பசுந்தீவனம் வளர்க்க விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூபாய் 3000 முதல் ஒரு ஹெக்டருக்கு ரூ.7,500 வரை அரசால் மானியமாக வழங்கப்படுகிறது. விருப்பமுள்ள விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கற்பகம் தகவல் தெரிவித்துள்ளார்.