அகஸ்தீஸ்வரம்: பிரபல யூடியூபர் மதுமிதா மீது திருட்டு வழக்கு பதிவு!
நாகர்கோவிலை சேர்ந்த யூடியூபர் மதுமிதா மீது, நெல்லையை சேர்ந்த ஒப்பந்ததாரர் பேச்சிமுத்து அளித்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் போலீசார் செயின் பறிப்பு வழக்கு பதிவு செய்துள்ளனர். 2022-ல் காரில் வைத்து 5 சவரன் நகை திருடப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.