நாங்குநேரி: ஏர்வாடியில் 314 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் - 2 பேர் அதிரடி கைது
திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகே விளையாட்டு மைதானம் பகுதியில் போலீசார் நடத்திய சோதனையில், 314 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களைப் பறிமுதல் செய்து இருவரை கைது செய்துள்ளனர். ஏர்வாடி காவல் நிலைய ஆய்வாளர் சுதா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.