திருப்பூர் தெற்கு: திருப்பூரில் 39 தொழிலாளர்களிடம் மோசடி: மனை வாங்கித் தருவதாகக் கூறி லட்சக்கணக்கில் பறிப்பு
திருப்பூர் முதலிபாளையம் மானூர் பகுதியில் 'செந்தில் நகர் Phase-VI' திட்டத்தில் மனை தருவதாகக் கூறி 39 தொழிலாளர்களிடம் முன்பணம் பெற்று மோசடி செய்ததாக ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பணத்தை திருப்பித் தர அல்லது நிலத்தை பத்திரப்பதிவு செய்து தர தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.