விருத்தாசலம்: மணிமுத்தாற்றில் மாசி மகத்தின் போது சேர்ந்த பிளாஸ்டிக் குப்பைகளை தீயிட்டுக் கொளுத்திய நகராட்சி துப்புரவு பணியாளர்கள்;தடுத்து நிறுத்திய நா.த.கவினர்.
விருதாச்சலம் மாசி மக திருவிழாவில் மணிமுத்தாற்று பகுதியில் குவிந்த பொதுமக்கள் வீசிச் சென்ற குப்பைகள் குவியல் குவியலாக இருந்த நிலையில் அதனை விருதாச்சலம் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் இன்று ஒன்று சேர்த்து தீயிட்டு கொளுத்தினர். பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருள்களை எரிப்பதை கண்ட நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை நிர்வாகிகள் உடனடியாக அங்கு சென்று அப்பணியை நகராட்சி துப்புரவு பணியாளர்களிடம் பேசி தடுத்து நிறுத்தினர் குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை நிர்வாகத்திடம் ஒப்படைக்கவும் அவர்கள் வலியுறுத்தினர்