வாணியம்பாடி புதூர் பகுதியில் ஆல் இந்தியா முஸ்லீம் பர்சனல் லா போர்டு, ஜாயிண்ட் கமிட்டி, இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில், பாஜக அரசால் கொண்டுவரப்பட்ட வக்ஃப் வாரிய சட்டத்திருத்ததிற்கு எதிராக நேற்று இரவு கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில் வேலூர் MPகதிர்ஆனந்த் மற்றும், மனித நேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த தமிமுன் அன்சாரி பேட்டி அளித்தார்.