மானூர்: திருநெல்வேலி: ஒரே நாளில் 3 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது!
திருநெல்வேலி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போக்சோ வழக்குகளில் தொடர்புடைய 3 பேர் தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். நடப்பாண்டில் இதுவரை 125 பேர் இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.