நத்தம்: வீட்டில் நகை, பணம் திருடியவர்கள் கைது - அதிர்ச்சி வாக்குமூலம்!
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ராக்காச்சிபுரம் பகுதியில் நகை, பணம் திருடிய மதுரையைச் சேர்ந்த விஜய், ரங்கராஜன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். திருடிய நகைகள் அனைத்தும் கவரிங் நகைகள் எனத் தெரிந்ததால் தாங்கள் ஏமாந்து போனதாக குற்றவாளிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.