நாங்குநேரி: திருநெல்வேலி: கத்தியை காட்டி வழிப்பறி செய்த 2 பேர் கைது - 24 கிராம் நகை மீட்பு
திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கத்தியை காட்டி மிரட்டி நகை, பணம் பறித்த வழக்கில் தென்காசியைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் மற்றும் அரவிந்த் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 24 கிராம் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன.